உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தி ராமர் கோயிலில் கருவறை, சன்னதி தயார்; வரும் ஜனவரியில் பிரம்மாண்ட ராமர் சிலை பிரதிஷ்டை

அயோத்தி ராமர் கோயிலில் கருவறை, சன்னதி தயார்; வரும் ஜனவரியில் பிரம்மாண்ட ராமர் சிலை பிரதிஷ்டை

ஹரித்துவார்: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட ராமர் கோயிலில் கருவறை, சன்னதி தயாராகி விட்டது.

உத்தரபிரதேசம், அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி 2020 ஆக., 5ல் அடிக்கல் நாட்டி துவக்கினார். 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், மூன்று தளங்களாக அமைக்கப்படுகிறது. கோயிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நுாலகம், மகரிஷி, வால்மிகி ஆராய்ச்சி நிலையம் மூலவர் மண்டபம் உட்பட 6 மண்டபங்கள் அமைய உள்ளன. மூலவர் கோபுரத்தின் உயரம் 161 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரித்துவார் வந்த ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியதாவது:  அயோத்தியில் கோயிலில் முதல் தளம் அமைக்கும் பணியில் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. கோயிலின் கருவறை மற்றும் சன்னதி தயாராகி விட்டது. 2024ம் ஆண்டு ஜனவரியில் மகர சங்கராந்திக்குப் பிறகு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !