மைசூரு தசரா விழாவில் பங்கேற்க காட்டிலிருந்து யானைகள் புறப்பாடு
ADDED :829 days ago
பெங்களூரு; மைசூரு தசரா விழாவில் பங்கேற்க ஒன்பது யானைகள் கொண்ட முதல் குழு காட்டில் இருந்து புறப்பட்டது.
உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா, அக்டோபர் 15ம் தேதி துவங்கி, அக்டோபர் 24ம் தேதி முடிகிறது. இறுதி நாளில் விஜயதசமியை ஒட்டி ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும்.விழாவிற்கு ஒன்றரை மாதத்திற்கு முன்பே, ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகள், காட்டில் இருந்து, அரண்மனைக்கு அழைத்து வரப்படும். அதன்படி மைசூரு தசரா விழாவில் பங்கேற்க 9 யானைகள் கொண்ட குழு காட்டில் இருந்து மைசூரு நகருக்கு புறப்பட்டது.