பழநியில் குவிந்த பக்தர் கூட்டம்; காத்திருந்து தரிசனம்
ADDED :1138 days ago
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு நேற்று வெளியூர், வெளி மாநில பக்தர்கள் அதிகளவில் வந்தனர். பொது, கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். மலை மேல் செல்ல வின்ச், தரிசன வரிசையிலும் பக்தர்கள் ஒரு மணி மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து டிக்கெட் பெற்றனர். மலை அடிவாரம், கிரிவீதி சன்னதியில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் இருந்தது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் பக்தர்கள் அவதிப்பட்டனர். திருஆவினன்குடி கோயிலில் கூட்டம் அதிகம் இருந்தது. அடிவாரம் முக்கிய வீதிகளில் வாகனங்களை நிறுத்தி இருந்ததால் நெரிசல் ஏற்பட்டது.