ஞானபுரீஸ்வரர் கோவிலில் ஐந்து அடி அத்திவரதர் சிலை பிரதிஷ்டை
ADDED :824 days ago
திருமங்கலம்: திருமங்கலம் உச்சபட்டியல் ஞானாம்பிகை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் கோவிலில் அத்தி மரத்தால் செய்யப்பட்ட ஐந்து அடி உயரமுள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத அத்திவரதர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, தைலக்காப்பு மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி பாலகிருஷ்ணன், உச்சபட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் கார்த்திகேயன், சமூக ஆர்வலர் வெங்கடேஷ் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.