/
கோயில்கள் செய்திகள் / கோலாகலமாக நடந்து வந்த திருப்பதி பிரம்மோற்சவம்; கருடகொடி இறக்கத்துடன் நிறைவு
கோலாகலமாக நடந்து வந்த திருப்பதி பிரம்மோற்சவம்; கருடகொடி இறக்கத்துடன் நிறைவு
ADDED :935 days ago
திருப்பதி: கடந்த ஒன்பது நாட்களாக நடந்து வந்த, திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழா இன்று இரவுடன் நிறைவு பெற்றது. இன்று காலை, திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, தீர்த்த வாரிக்காக, திருக்குளத்திற்கு வந்தார். அங்கு, சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. அச்சமயத்தில், அங்கு கூடியிருந்த பக்தர்களும், புனித நீராடினர். இரவு தங்கப் பல்லக்கில், மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில், பக்தர்கள் புடைசூழ வலம் வந்தார். தொடர்ந்து பிரம்மோற்சவம் முடிந்ததன் அடையாளமாக இரவு, கருட கொடி இறக்கப்பட்டு நடப்பு ஆண்டுக்கான முதல் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.