உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புகைப்பட்டி பெருமாள் கோவில் தேரோட்டம்; ராட்சத கிரேனில் காவடி எடுத்து நேர்த்திக்கடன்

புகைப்பட்டி பெருமாள் கோவில் தேரோட்டம்; ராட்சத கிரேனில் காவடி எடுத்து நேர்த்திக்கடன்

உளுந்துார்பேட்டை: புகைப்பட்டி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டத்தில் பக்தர்கள் ராட்சத கிரேனில் பறவை காவடியாக நேர்த்திக் கடன் செலுத்தினர்.

உளுந்துார்பேட்டை தாலுகா புகைப்பட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் நேற்று நடந்தது. தேரோட்டத்தையொட்டி கடந்த வாரம் சனிக்கிழமை காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினசரி பஜனையும், இரவு நேரங்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி வீதியுலாவும் நடந்தது. நேற்று தேரோட்டத்தையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருள செய்து வீதியுலா நடந்தது. அப்போது பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனர். பல பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக ராட்சத கிரேனில் பறவை காவடி எடுத்து வலம் வந்து வழிபட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் புகைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !