உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வர வேண்டி தவளைக்கு திருமணம்: வினோத வழிபாடு

மழை வர வேண்டி தவளைக்கு திருமணம்: வினோத வழிபாடு

தொண்டாமுத்தூர்: குரும்பபாளையத்தில், மழை பெய்ய வேண்டி, தவளைக்கு திருமணம் செய்து கிராம மக்கள் வினோத வழிபாடு நடத்தினர்.

வேடபட்டி பேரூராட்சிக்குட்பட்ட குரும்பபாளையம் கிராமத்தில், இந்தாண்டு, சரிவர மழை பெய்யாததால், மழை பெய்ய வேண்டி, தவளைகளுக்கு திருமணம் செய்யப்பட்டது. இந்த வினோத திருமணத்திற்காக, ஆண் தவளை மற்றும் பெண் தவளை பிடித்து வைத்திருந்தனர். இதில், திருமண நிகழ்ச்சியை போலவே, நிச்சயதார்த்தம், மாப்பிள்ளை அழைப்பு உள்ளிட்டவைகள் நடந்தது. ஆண் தவளையை, தர்மாக்கோளால் செய்யப்பட்ட மாட்டு வண்டியில் வைத்து எடுத்து வந்தனர். பெண் தவளைக்கு, நகைகள் அணிவித்து அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, மாலை, 7:15 மணிக்கு, குரும்பபாளையம் விநாயகர் கோவிலில் வைத்து, மேளதாளம், நாதஸ்வரம் முழங்க, பெண் தவளைக்கு ஆண் தவளை வைத்திருந்தவர் தாலி கட்டினார். தொடர்ந்து, கிராம மக்கள் மணமக்களுடன் ஊர்வலமாக, அருகிலுள்ள கிணற்றிற்கு சென்று சிறப்பு பூஜை செய்து, தவளைகளை கிணற்றில் விட்டனர். தொடர்ந்து, கிராம் மக்களுக்கு, கிடா வெட்டி, விருந்து நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !