தஞ்சை பெரியகோவிலில் பிரதோஷ அபிஷேகம்; சிவ சிவ கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
ADDED :769 days ago
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் பெரியகோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளாமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் பெரியகோவிலில் இன்று புரட்டாசி பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோவிலில் இன்று மாலை நடந்த பிரதோஷ பூஜையில் நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள், சந்தனம்,திரவியப்பொடி, விபூதி உள்ளிட்ட மங்கள பொருட்களால் குடம், குடமாக அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளாமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.