/
கோயில்கள் செய்திகள் / செல்வம், நீண்ட ஆயுள் தரும் சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி; பக்தர்கள் பரவசம்
செல்வம், நீண்ட ஆயுள் தரும் சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி; பக்தர்கள் பரவசம்
ADDED :830 days ago
திருப்பதி; திருமலை வெங்கடேஸ்வர ஸ்வாமியின் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் ஏழாவது நாளான இன்று சனிக்கிழமை காலை மலையப்ப சுவாமி சூரியபிரபா வாகனத்தில் பக்தர்களுக்கு தரிசனம் செய்தார்.
திருப்பதி ஸ்ரீவாரி ஆண்டு பிரம்மோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, 7ம் நாளான இன்று சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்து மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சூரிய பிரபை வாகனத்தில் இறைவனை தரிசித்தால், செல்வச் செழிப்பு, நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்கள் குழுக்கள், பஜனை, கோலங்கள், மங்கள வாத்தியங்களுக்கு நடுவே இறைவனின் வாகனசேவை கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோவிந்தா.. கோபாலா கோஷத்துடன் வழிபாடு செய்தனர்.