/
கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் நவராத்திரி திருவிழா; அம்பு விட்டு அரக்கனை கொன்ற ஆனந்தவல்லி அம்மன்
சதுரகிரியில் நவராத்திரி திருவிழா; அம்பு விட்டு அரக்கனை கொன்ற ஆனந்தவல்லி அம்மன்
ADDED :762 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் அம்பு விடுதல் விழா, வெகு சிறப்புடன் மலையில் நடந்தது.
இக்கோயிலில் அக். 15 முதல் துவங்கிய நவராத்திரி விழாவில் விஜயதசமி நாளான இன்று ஆனந்தவல்லி அம்மன் மகிஷாசுரவர்த்தினி அலங்காரத்தில் வில், அம்புடன் எழுந்தருளினார். பக்தர்கள் முளைப்பாரியை கோவில் முன்வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் கோயில் வளாகத்தின் வெளியே வாழை மர உருவில் மறைந்திருந்த மகிஷாசுர அரக்கனை, ஆனந்த வல்லி அம்மன் அம்பு விட்டு அழித்தார். அப்போது பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பியும், குலவையிட்டும் ஆரவாரம் செய்தனர். ஏற்பாடுகளை ஏழூர் சாலியர் சமுதாயத்தினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். வனத்துறையினரின் கடும் கட்டுப்பாட்டால் மிகக் குறைந்த பக்தர்களே விழாவில் பங்கேற்றனர்.