உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கந்த சஷ்டி உற்சவம் விமரிசை

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கந்த சஷ்டி உற்சவம் விமரிசை

திருப்போரூர்: திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நடை பெறும் கந்தசஷ்டி விழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று காலை 9:00 மணிக்கு, இரண்டாம் நாள் பல்லக்கு உற்சவத்தில், கந்தபெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, உற்சவர் கந்தசுவாமிக்கு லட்சார்ச்சனை விழா நடந்தது. இரவு ஆட்டுக்கடா வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !