கிட்டாம்பாளையம் பழனியாண்டவர் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :707 days ago
கருமத்தம்பட்டி: கிட்டாம்பாளையம் பழனியாண்டவர் கோவில் திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
கிட்டாம்பாளையத்தில் உள்ள பழனியாண்டவர் கோவில் பழமையானது. இக்கோவிலில், கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழா கோலாகலமாக நடந்தது. சூரசம்ஹார விழா முடிந்து நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். முன்னதாக, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு பல வகையான திரவியங்களால் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் பழனியாண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.