/
கோயில்கள் செய்திகள் / அம்மன் அவதார தினம்; 108 தட்டுகளில் இனிப்புகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய பக்தர்கள்
அம்மன் அவதார தினம்; 108 தட்டுகளில் இனிப்புகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய பக்தர்கள்
ADDED :674 days ago
காரைக்குடி; மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினத்தை முன்னிட்டு 108 தட்டுகளில் பலகாரங்கள், இனிப்புகள் அம்மனுக்கு படைத்து, பக்தர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் அவதரித்த தினமான கார்த்திகை 5ம் தேதி ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன் அடிப்படையில் நேற்று ஓம் சஷ்டி சேவா சார்பில் பால்குட விழா நடந்தது. தொடர்ந்து, 108 தட்டுகளில் பலகாரங்கள், இனிப்புகள் அம்மனுக்கு படைத்து, பக்தர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.