உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்டாசுர வதம்!

பண்டாசுர வதம்!

ஒரு சிறுமியைத் தவிர வேறு யாராலும் அழிவு ஏற்படக்கூடாது என வரம் பெற்ற பண்டன் என்னும் அசுரன், தேவர்களை துன்புறுத்தினான். அவர்கள் அம்பிகையிடம் முறையிட, அவள் சிறுமியாக உருமாறி அசுரனை அழித்தாள். தேவர்களின் வேண்டுதலுக்காக காஞ்சிபுரத்தில் எழுந்தருளினாள். இவளது பெயரை காம+அக்ஷி என பிரிக்க வேண்டும். காமம் என்றால் விருப்பம். அக்ஷி என்றால் கண். பக்தர்களின் காமம் எனப்படும் விருப்பங்களை அருளும் கருணைக்கண் கொண்டவள் என்பதால் காமாட்சி என பெயர் பெற்றாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !