உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா பைரவர் கோவில் ஆண்டு விழா; பைரவருக்கு 16 வகை அபிஷேகம்

மகா பைரவர் கோவில் ஆண்டு விழா; பைரவருக்கு 16 வகை அபிஷேகம்

அன்னூர்: மொண்டிபாளையம் பைரவர் கோவிலில் ஒன்பதாவது ஆண்டு விழா நேற்று நடந்தது.

அன்னூர் அருகே மொண்டி பாளையத்தில், மகா பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒன்பதாவது ஆண்டு விழா நேற்று நடந்தது. பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து வேள்வி பூஜை நடந்தது. அலங்கார பூஜைக்கு பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோவிலில் மகா ஜென்மாஷ்டமி விழா வரும் டிச. 5ம் தேதி நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !