உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு; கொட்டும் மழையில் குடை பிடித்தபடி குவிந்த பக்தர்கள்

ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு; கொட்டும் மழையில் குடை பிடித்தபடி குவிந்த பக்தர்கள்

திருவொற்றியூர், சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில், ஆண்டுமுழுதும், மூலவர் ஆதிபுரீஸ்வரர் தங்க முலாம் பூசிய கவசம் அணிவித்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆண்டுக்கொரு முறை, கார்த்திகை மாதத்தில் மூன்று நாட்கள் மட்டும், ஆதிபுரீஸ்வரருக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசம் திறக்கப்பட்டு, புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடக்கும். அதன்படி, இவ்வாண்டு, ஆதிபுரீஸ்வரருக்கு அணிவிக்கப்பட்டுள்ள கவசம் திறக்கப்பட்டு, புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இன்றும் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !