/
கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் மழலை உருவத்தில் ஐயப்பன்.. கடும் கூட்டத்திலும் கபடமற்ற தரிசனம்..!
சபரிமலையில் மழலை உருவத்தில் ஐயப்பன்.. கடும் கூட்டத்திலும் கபடமற்ற தரிசனம்..!
ADDED :778 days ago
சபரிமலை; சபரிமலையில் மண்டல காலம் நடந்து வரும் நிலையில், மூன்று நாட்களாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நிலக்கல்லுக்கு, 10 கி.மீ., முன்பே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அங்கு இரண்டு மணி நேரம் காத்திருந்த பின் பம்பை வருகின்றனர். பம்பையிலும் நான்கு மணி நேரம் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். கூட்டம் காரணமாக வாகனங்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டதால் நிலக்கல்லுக்கு பக்தர்கள் நடந்து செல்கின்றனர். 18 படிகளில் பக்தர்களை கேரளா பட்டாலியன் போலீசார் வேகமாக ஏற்றி தரிசனத்திற்கு அனுப்புகின்றனர். நேற்று கடும் கூட்டத்திலும் ஐயப்பனை கண்ட ஆனந்தத்தில் பக்தியுடன் வணங்கிய மழலையை கண்ட பக்தர்கள் ஐயப்பனையே கண்டதாக பரவசப்பட்டனர்.