/
கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோயில்களில் பகல்பத்து இன்று ஆரம்பம்; பகல்பத்து ராப்பத்து என்றால் என்ன?
பெருமாள் கோயில்களில் பகல்பத்து இன்று ஆரம்பம்; பகல்பத்து ராப்பத்து என்றால் என்ன?
ADDED :778 days ago
மார்கழி மாதத்தில் பெருமாள் கோயில்களில், பகல்பத்து என்னும் பெயரில் பகலில் பத்துநாட்களும், ராப்பத்துவிழா என்னும் பெயரில் இரவில் பத்துநாட்களுமாக வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படும். மார்கழி அமாவாசைக்கு அடுத்த பிரதமை நாளில் தொடங்கும் பகல்பத்து, தசமி திதியன்று முடியும். வைகுண்ட ஏகாதசி தினம் முதல் பஞ்சமி வரை ராப்பத்து நடைபெறும்.