குறிஞ்சீஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக யாக வேள்வி பூஜை
ADDED :665 days ago
மேட்டுப்பாளையம் ; மேட்டுப்பாளையம் அருகே, ஜடையம்பாளையம் ஊராட்சி, குறிஞ்சி நகரில் உள்ள குறிஞ்சீஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக யாக வேள்வி பூஜை மற்றும் 108 மகா சங்கபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் குறிஞ்சீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.