சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலபைரவ யாக விழா
ADDED :742 days ago
முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள பைரவருக்கு 12ம் ஆண்டு சம்பக சஷ்டி காலபைரவ விழா நடந்தது.காலை 9 மணிக்கு கணபதி ஹோமம் தொடங்கி அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை,கும்பபூஜை,அஷ்ட பைரவர் யாகம், மகா பூர்ணாஹீதி சிறப்பு அபிஷேகம் நடந்தது.பின்பு பைரவர் மலர் அலங்காரம் செய்யப்பட்டது.ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் தலைமை வகித்தார். கௌரவ கண்காணிப்பாளர் கோவிந்தராமு முன்னிலை வகித்தார்.விழாவில் முதுகுளத்தூர் சுற்றியுள்ள ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.