உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனியை மிதித்து அருள்பாலிக்கும் அபூர்வ ஆஞ்சநேயர்!

சனியை மிதித்து அருள்பாலிக்கும் அபூர்வ ஆஞ்சநேயர்!

சீதையை மீட்க சென்றபோது ராவணனின் மகன் இந்திரஜித்துடன் போரிட்டார் ராமர். அவன் ராம லட்சுமணரையும், வானர வீரர்களையும் பிரம்மாஸ்திரத்தால் கட்டி மயங்க செய்தான். அவர்களை எழுப்புவதற்காக ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கி வந்தார். ராவணின் ஆணைப்படி அனுமனை வழிமறித்தார் சனிபகவான். ஆஞ்சநேயர் அவனை தலையில் மிதித்து கட்டுப்படுத்தினார். இவர் சனி பகவானை தனது காலில் மிதித்தபடி விஸ்வரூப ஆஞ்சநேயராக வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அருளுகிறார். சுயம்புமூர்த்தியான இவர் சஞ்சீவி மலையை தூக்கி வந்தபோது பெரிய வடிவில் இருந்ததால் இப்பெயரில் அழைக்கின்றனர். கருவறையில் இவருக்கு அருகிலேயே உற்சவ ஆஞ்சநேயரும் இருக்கிறார். ஆஞ்சநேயரின் இக்கோலம் அபூர்வமானதாகும். சனி தோஷத்தால் பாதிக்கபட்டவர்கள் இங்கு தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !