பழநி திருஆவினன்குடி கோயிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை
ADDED :668 days ago
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் சனி பெயர்ச்சி நிகழ்வை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.
பழநி திரு ஆவினன்குடி கோயிலில் சனீஸ்வர பெருமானுக்கு தனி சன்னதி உள்ளது. நேற்று மாலை 5 23 மணிக்கு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு திரு ஆவினன்குடி கோயிலில் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. யாகபூஜையில் வைக்கப்பட்ட கலசத்திற்கு தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் மேளதாளத்துடன் கலசத்தை எடுத்து வந்து தனி சன்னதியில் இருந்த சனி பகவானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் சிறப்பு பூஜைகள், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோயில் கமிஷனர் மாரிமுத்து மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.