அபுதாபியில் பிரமாண்ட இந்து கோயில் திறப்பு : பிரதமர் மோடி பங்கேற்க அழைப்பு
ADDED :730 days ago
அபுதாபி : அபுதாபியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ள இந்து கோயில் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை கோயில் நிர்வாகிகள் பிரதமர் மோடியிடம் வழங்கினர்.
ஐக்கிய அமீரக ஏமிரேட்சின் அபுதாபியில் பாப்ஸ் அமைப்பு சார்பில் பிரமாண்டமான முறையில் இந்து கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் 2024 பிப்ரவரி மாதம் திறக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் கோவில் நி்ர்வாகிகள் பிரதமர் மோடியை சந்தித்து திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கினர். அதனை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். முன்னதாக கோவில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் கோவிலுக்கான இடத்தை வழங்கிய அமீரக அரசுக்கு ஏற்கனவே நன்றி தெரிவித்திருந்தார்.