உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அவிநாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 2ம் தேதி நடைபெறுகின்றது. இதற்காக  கோவிலில் உள்ள மூலவர் சன்னதி, உள் பிரகாரம் மற்றும் இரண்டாம் பிரகாரத்தில் கல் தளம் அமைத்தல், ராஜ கோபுரத்திற்கு வண்ணம் தீட்டுதல், அம்மன் சன்னதி சுற்றிலும் நீராளி பத்தி அமைக்கும் வேலைகள், திருமாளிகை பத்தி மண்டபத்தில் கல் அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இதில், தேக்கு மரத்திலான புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கோவில் அறங்காவலர் குழு தலைவர் டாக்டர் சக்திவேல், அறங்காவலர் பொன்னுச்சாமி, ஆறுமுகம் கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன், கொடி மர உபயதாரர் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !