உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் ராமாயண பாராயணம் கேட்ட பிரதமர் மோடி

ராமேஸ்வரத்தில் ராமாயண பாராயணம் கேட்ட பிரதமர் மோடி

ராமேஸ்வரம் ; ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடி, ராமகிருஷ்ண மடத்தில் 10 நிமிடம் ஓய்வுக்கு பிறகு மீண்டும் காரில் புறப்பட்ட பிரதமர் மோடி மத்திய, மாநில பாதுகாப்பு படையுடன் மதியம் 3:15 மணிக்கு அக்னி தீர்த்த கடலுக்கு சென்று மூழ்கி புனித நீராடினார். பின் ஈரத் துணியுடன் அங்கிருந்து பேட்டரில் காரில் புறப்பட்டு கோயில் கிழக்கு கோபுர வாசலுக்கு மதியம் 3:30 மணிக்கு வந்தார். பிரதமருக்கு, கோயில் குருக்கள் பூர்ண கும்ப மரியாதை கொடுத்து கோயிலுக்குள் அழைத்து சென்றனர். பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை பிரதமர் நடந்து சென்று புனித நீராடினார். கோயில் வளாகத்தில் புதிய ஆடை அணிந்து கொண்டு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன் அமர்ந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோயிலில் நடைபெற்ற ராமாயணப் பாராயணம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில், எட்டு வெவ்வேறு பாரம்பரிய மண்டலிகள் சமஸ்கிருதம், அவாதி, காஷ்மீரி, குருமுகி, அஸ்ஸாமி, பெங்காலி, மைதிலி மற்றும் குஜராத்தி ராம்கதாக்களை (ஸ்ரீராமன் அயோத்திக்குத் திரும்பிய அத்தியாயத்தை) பாராயணம் செய்தார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !