உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் ருத்ர ஹோம சண்டி ஹோமம் மண்டபம் புதுப்பிப்பு

காளஹஸ்தி சிவன் கோயிலில் ருத்ர ஹோம சண்டி ஹோமம் மண்டபம் புதுப்பிப்பு

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில்  உள்ள ருத்ர ஹோம சண்டி ஹோம மண்டபம் சுமார் 13 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது . இன்று திங்கட்கிழமை ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக  சீனிவாசுலு தலைமையில் பணிகள் நடந்தது. கோயில் வேத பண்டிதர்கள், மண்டபத்தில் உள்ள சாமி அம்மையார்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி கற்பூரம் ஆரத்திகளை சமர்ப்பித்தனர். ருத்ர ஹோமம் சண்டி ஹோமம் மண்டபத்தை தொடங்கிய பின்னர் முதல் ருத்ர சண்டி ஹோமம் பூஜையை கோயில் அறங்காவலர் குழு  உறுப்பினர் கொன்டூரு சுனிதா -  நந்தா தம்பதியினர் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பூஜை பொருளை கோயிலுக்கு எம்எல்ஏ மதுசூதன் ரெட்டியிடம் காணிக்கையாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள், வேதப் பண்டிதர்கள், அர்ச்சகர்கள் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !