விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் மாசி மக பிரம்மோற்சவம்: விபசித்து முனிவருக்கு சுவாமி காட்சி
விருத்தாசலம்: விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவ ஆறாம் நாளில் விபசித்து முனிவருக்கு பெரியநாயகர் சுவாமி காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது.
விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவத்தில், விபசித்து முனிவருக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்த அருள்பாலித்து வருகிறார். ஆறாம் நாள் உற்சவமாக இன்று (20ம் தேதி) காலை 6:00 மணிக்கு பெரிய நாயகர், பெரிய நாயகி, இளையநாயகி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் வி ருத்தகிரீஸ்வரர் எழுந்தருளி, விபசித்து முனிவருக்கு காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவ ஆறாம் நாளில் விபசித்து முனிவருக்கு பெரியநாயகர் சுவாமி காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.