/  
                        கோயில்கள்  செய்திகள்  /  கும்பகோணத்தில் மாசி மகத் திருவிழா : தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
                      
                      கும்பகோணத்தில் மாசி மகத் திருவிழா : தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
                              ADDED :616 days ago 
                            
                          
                          தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், நடைபெறவுள்ள மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த ஆண்டு உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, இந்தாண்டு கொண்டாடப்படவுள்ள மாசிமகத் திருவிழாவினை முன்னிட்டு நாளை (24ம் தேதி) ஒருநாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆணை பிறப்பித்துள்ளார்.