உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டியில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஊட்டியில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: கோவில்களில் சிறப்பு வழிபாடு

 ஊட்டி: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக நடந்தது.


ஊட்டி பழைய அக்ரஹாரம் பகுதியில் எழுந்தருளியுள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான, ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி மஹோர்ச்சவம் நடந்தது. கடந்த, பத்து நாட்களாக நடந்த விழாவில், மகா சுதர்சன ஹோமம், விஷேச ஹோமங்கள் நடத்தப்பட்டது. நாள்தோறும், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ‘வாழைப்பழ அலங்காரம், வெண்ணை காப்பு அலங்காரம், உலர் பழங்கள் அலங்காரம், வெற்றிலை சாத்து அலங்காரம், கனி அலங்காரம், ராஜா அலங்காரம், செந்துார் அலங்காரம் மற்றும் ராஜா அங்கி அலங்காரம்,’ உட்பட, பல்வேறு அலங்காரங்களில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று மதியம், 3:00 மணி அளவில் ஐயனின் திருவீதி உலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, இந்து அறநிலையத்துறை நிர்வாகிகள், அர்ச்சகர்கள் ஹரி, முரஹரி மற்றும் பட்டாச்சாரியார் சடகோபன் ஆகியோர் செய்திருந்தனர். இதேபோல, புதிய அக்ரஹாரம் பகுதியில் எழுந்தருளியுள்ள வேணுகோபால சுவாமி கோவில், வேலி வியூ ஆஞ்சநேயர் கோவில், பாரஸ்ட் கேட் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் உட்பட விழா கொண்டாடப்பட்டது.


* முதுமலை, மசினகுடி ஸ்ரீராம ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நேற்று முன்தினம், துவங்கியது. மாலை, 6:00 மணிக்கு தீபம் கம்பம் ஏற்றும் நிகழ்ச்சியும், 6:30 மணிக்கு ராம நாம வேள்வி நிகழ்ச்சி நடந்தது. நேற்று, அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5:00 மணிக்கு தீபம் கம்பம் ஏற்றுதல், 6:00 மணிக்கு கணபதி ஹோமம், 7:00 மணிக்கு அபிஷேகம், 8:00 சிறப்பு அலங்கார நிகழ்ச்சியும், 8:15 மணிக்கு வெண்ணெய் சாட்டுதல், தொடர்ந்து மகா தீபாராதனை பூஜைகள் நடந்தது. காலை 10:00 மணிக்கு அய்யனுக்கு கவசம் அணிவித்தல், 11:00 மணிக்கு வெற்றிலை மாலை சாற்றுதல், மதியம் 12:15 மணிக்கு வட மாலை சாற்றி சிறப்பு அலங்காரம் வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு தீப கம்பம் ஏற்றுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து தேர் பவனி ஊர்வலம் நடந்தது.மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களிலும் விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !