விஸ்வரூப அபய ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம்
ADDED :8 hours ago
புதுச்சேரி: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, விஸ்வரூப அபய ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நேற்று நடந்தது.
கொம்பாக்கம் மெயின் ரோட்டில் அலர்மேல்மங்கா சமேத வேங்கடாசலபதி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 23 அடி உயர விஸ்வரூப அபய ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, விஸ்வரூப அபய ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நேற்று காலை நடந்தது. தொடர்ந்து, மஞ்சள், சந்தனம், தயிர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் சட்டசபை எதிர்கட்சி தலைவர் சிவா, கொம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் திரளாக தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.