உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரனூர் சத்திரம் திரவுபதி அம்மன் கோவில் தேர், தீமிதி விழா

பரனூர் சத்திரம் திரவுபதி அம்மன் கோவில் தேர், தீமிதி விழா

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த பரனூர் சத்திரம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழாவின் ஒரு பகுதியாக திருக்கல்யாண வைபவம் நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த பரனூர் சத்திரம் திரௌபதி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த ஒன்றாம் தேதி துவங்கியது விழாவின் ஐந்தாம் நாளான நேற்று காலை மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், மாலை 5 மணிக்கு திரௌபதி அம்மன் சமேத அர்ஜுனன் அலங்கரிக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் நடந்தது இரவு சுவாமி வீதி உலா நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 9ம் தேதி மாலை அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்கள் வடம் பிடிக்க தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தும் வைபவம் நடக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !