12 ஆண்டுகளுக்குப் பிறகு அய்யனார் கோவிலில் சுவாமி பெட்டி எடுக்கும் ஊர்வலம்
ADDED :645 days ago
திருமங்கலம்; திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் சாத்தங்குடியில் பழைமை வாய்ந்த அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாசி மாத முதல் பெட்டி எடுக்கும் விழா நடந்தது. அய்யனார் சாமி ஆபரணங்கள் கொண்ட பெட்டியை மலர்களால் அலங்கரித்து, சந்தனம், பன்னீர் போன்ற நறுமண பொருட்கள் பூசப்பட்ட பெட்டியை கோயில் பூசாரிகள் தலை சுமையாக சுமந்து ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் ஆக கொண்டு சென்று கோவிலில் அடைந்தனர். கோவிலின் சாமி பீடம் அமைந்துள்ள இடத்தில் வைத்து பெட்டிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம், சாத்தங்குடி, கண்டுகுளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.