கணவர் வெளியூர் கிளம்பிய பிறகு மனைவி வாசல் தெளித்து கோலமிடுவது சரியா?
ADDED :5124 days ago
காலைமுதல் இரவு வரை செய்யப்படும் எல்லா விஷயங்களும் நல்லபடியாக அமையவேண்டும் என்பதற்காகத் தான் வாசல் தெளித்து கோலமிட்டு அந்த நாளை மங்களகரமாக தொடங்குகிறோம். எவ்வளவு அதிகாலை வேளையில் புறப்பட்டாலும், அதற்கு முன் வாசல் தெளித்து கோலமிட்டு, குளித்து, சுவாமி விளக்கேற்றி கும்பிட்டு கணவருக்குச் சிற்றுண்டி கொடுத்து அனுப்புவது தான் இல்லத்தரசியின் கடமை.