இக்கால குழந்தைகளிடம் பக்தியை எப்படி வளர்க்க வேண்டும்?
ADDED :5124 days ago
முதலில் பெற்றோர் தினமும் வழிபாடு செய்ய வேண்டும். பூஜைக்கு தேவையான உதவிகளான பூப் பறித்தல், விளக்கேற்றுதல், கோலமிடுதல் போன்ற வற்றைச் செய்ய பழக்கவேண்டும். பக்திப்பாடல்கள், ஸ்தோத்திரங்கள் சொல்லும்போது அவர்களையும் நம்முடன் சேர்ந்து சொல்லச் செய்ய வேண்டும். சினிமா, சீரியல் குழந்தைகளுடன் சேர்ந்து பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் தெய்வீக விஷயங்கள், கதைகள், புராணங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். நம் குழந்தைகள் நல்லவர்களாகவும், தெய்வபக்தி உள்ளவர்களாகவும் வளர்வதற்கான முறையில், முதலில் பெரியவர்கள் தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டியதும் அவசியம்.