அயோத்தி ராமரை 48 நாட்களில் ஒரு கோடி பக்தர்கள் தரிசனம்; யோகி ஆதித்யநாத்
ADDED :540 days ago
அயோத்தி; உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நகரில் நடைபெற்றநிகழ்ச்சியில், ரூ.1090 கோடி மதிப்பிலான 411 வளர்ச்சி திட்டங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது; பகவான் ஸ்ரீ ராம் லல்லாவின் அருளால், 48 நாட்களில் ஒரு கோடி மக்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும், அமைதியாகவும், இங்கு தரிசனம் செய்துள்ளனர். இந்த நாளை காணும் வாய்ப்பை பிரதமர் நரேந்திர மோடி நமக்கு அளித்தார். இதற்காக வாழ்த்தும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். அயோத்தியின் பெயர் உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. அனைவரும் இங்கு வந்து தரிசனம் செய்ய விரும்புகிறார்கள். ராமர் பிறந்த இடம் உலகின் மிக அழகான நகரமாக மாறி வருகிறது இவ்வாறு கூறினார்.