உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

குரும்பூர்; குரும்பூர் அருகே மேலப்புதுக்குடி, அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில், பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, காலை மகா கணபதி ஹோமமும், கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி, காலை மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, புஷ்ப அலங்கார உச்சிகால சிறப்பு பூஜையும், அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி, கோயிலில் வலம் வருதல் நடந்தது.  விழாவின் 6ம் நாளான வரும் 19ம் தேதிபகல் 1:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. 10ம் நாளான வரும் 24ம் தேதி, பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. அன்று காலை 9:00 மணிக்கு மேல் பங்குனி உத்திர கும்பாபிஷேகமும் நடக்கிறது. பகல் 11:00 மணிக்கு சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. திருவிழா10 நாட்களும் இரவு 8:00 மணிக்கு சிறப்பு கலைநிகழ்ச்சிகளும், இரவு 11:00 மணிக்கு அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி கோயில் வலம் வருதல் நிகழ்ச்சிநடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் குமரகுருபரன், வினோபால், அசோகராஜ், ராமநாதன், சரவணன், ராமகிருஷ்ணமுத்து, சுந்தரபாண்டியன், சுப்பிரமணியன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !