திருவாரூரில் தியாகராஜருக்கு அன்ன அபிஷேகம்!
ADDED :4742 days ago
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவிலில், ஐப்பசி மாத அன்ன அபிஷேகத்தில், ஆயிரகணக்கானோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் உள்ள சிவத்தலங்களில், மாதம் தோறும், ஒரு பூஜை நடத்தப்படுகிறது. இதில், ஐப்பசி மாதத்தில், சிவனுக்கு அன்னத்தில் அபிஷேகம் செய்தால், பாவங்கள் நீங்கி, பஞ்சம் இல்லாமல், செல்வ செழிப்புடன் மக்கள் வாழ்வர் என்பது ஐதீகம்.திருவாரூர் தியாகராஜர் கோவிலில், நேற்று மதியம், தியாகராஜர் மற்றும் அசலேஸ்வரர் சன்னதியில் நடந்த அன்ன அபிஷேகத்தில், கோவில் செயல் அலுவலர் உட்பட, சுற்றுப்பகுதியைச் @Œர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.