உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழனி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர விழா; குவிந்த பக்தர்கள்

வடபழனி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர விழா; குவிந்த பக்தர்கள்

சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதல் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

சென்னை, வடபழனியில் அமைந்துள்ளது ஆண்டவர் கோவில். முருகன் கோவில்களில் தொன்மையான தென்பழனிக்கு நிகராக இக்கோவில் புகழ்பெற்று விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து, அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற்றும் தலமாகவும் திகழ்கிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.  இன்று 24ம் தேதி உச்சி காலத்துடன் தீர்த்தவாரி மற்றும் யாகசாலை பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு, கலாசாபிஷேகத்துடன் பூஜைகள் நடைபெற்றது. அன்று இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி விதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !