குப்பிச்சிபாளையம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :896 days ago
கோவை ; கோவை, பெரியநாயக்கமன் பாளையம் குப்பிச்சிபாளையம் ரோட்டில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் வள்ளி தெய்வானையுடன் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.