பகவதி அம்மன் கோயில் பங்குனி உற்ஸவம்; பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :559 days ago
சோழவந்தான்; சோழவந்தான் அருகே இரும்பாடியில் பகவதி அம்மன் கோயில் பங்குனி உற்ஸவ விழா 2 நாட்கள் நடந்தது. முதல் நாள் வைகை ஆற்றுக்கு சென்று அம்மனுக்கு கரகம் ஜோடித்தனர். வான வேடிக்கை, மேளதாளம், முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மனை கோயில் அழைத்து வந்தனர். நேற்று காலை பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம், மாலை அலகுகுத்தி, அக்னிசட்டி எடுத்து, கரும்பு தொட்டில் சுமந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறுவர்கள் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கள்ளழகர் வேடமணிந்து வந்து வழிபட்டனர். கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர், கிராமத்தினர் செய்திருந்தனர்.