உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதாள செம்பு முருகன் கோயிலில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

பாதாள செம்பு முருகன் கோயிலில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில், ஏராளமான வெளி மாநில பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற பாதாளசெம்பு முருகன் கோயில் உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, ஜன. 21 முதல் ஆன்லைன் முன்பதிவு தரிசன முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மூலவருக்கு பாலாபிஷேகம், பழக்காப்பு அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. ஏராளமான வெளிமாவட்ட பக்தர்கள், காத்திருந்து தரிசனம் செய்தனர்.

சின்னாளபட்டி: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், விஸ்வரூப தரிசனம் நடந்தது. பால், பன்னீர், இளநீர் தயிர், தேன் உள்ளிட்ட திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விசேஷ பூஜைகளுடன், மகா தீபாராதனை நடந்தது.

* சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், மூலவருக்கு பழக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !