வல்லபை ஐயப்பன் கோயிலில் சித்திரை விஷுகனி தரிசனம்
ரெகுநாதபுரம்; சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் விசு கனி தரிசனம் நடந்தது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பதை போன்று இங்கும் ஒவ்வொரு ஆண்டும் விசு கனி தரிசனம் நடந்து வருகிறது. இன்று அதிகாலை 4:30 மணிக்கு வல்லபை விநாயகர், வல்லபை ஐயப்பன், மஞ்சமாதா, சங்கரன், சங்கரி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அஸ்டாபிஷேகம் நடந்தது.
கணபதி ஹோமம் செய்யப்பட்டது. அலங்கார கொலு மண்டபத்தில் உற்ஸவர் வல்லபை ஐயப்பனுக்கு முன்பாக கண்ணாடி வைக்கப்பட்டு அதன் அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட தட்டுகளில் மா, பலா, வாழை, புளியம்பழம், ஆப்பிள், கொய்யா, நிலக்கடலை, சக்கரவள்ளி கிழங்கு, ஆரஞ்சு மற்றும் ஏராளமான காய்கறிகள் பழங்கள் உள்ளிட்டவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சித்திரை தமிழ் மாதமான குரோதி வருடப் பிறப்பை முன்னிட்டு காலை முதல் மதியம் வரை ஏராளமான ஐயப்ப பக்தர்கள், பொதுமக்களுக்கு வெற்றிலை, பழம், பாக்கு, நாணயம் உள்ளிட்டவைகளை தலைமை குருசாமி மோகன் கைநீடமாக வழங்கினார். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.