உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம்

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம்

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. இக்கோயிலில் சித்திரை பால் குடவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஏப். 9 முதல் காப்புக்கட்டி விரதம் துவங்கினர். சித்திரைப் பிறப்பை  முன்னிட்டு  திருப்புத்தூர் கோட்டைக் கருப்பர் கோயிலில்  நேற்று காலை 6:30 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து  பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். முக்கிய வீதிகளின் வழியாக திருத்தளிநாதர் கோயில் வந்தனர். கோயிலில் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள மூலவர்  சுப்பிரமணியருக்கு சிறப்ப பூஜைகள் நடந்து பாலாபிஷேகம் நடந்தது. பின்னர் விபூதிக்காப்பு அலங்காரத்தில் சுவாமிக்கு தீாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் திரளாக சாமி தரிசனம் செய்தனர்.  ஏற்பாட்டினை தேவஸ்தானம் மற்றும் திருமுருகன் திருப்பேரவையினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !