உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் செய்த புகழ் திருட்டு!

சிவன் செய்த புகழ் திருட்டு!

பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் மும்மூர்த்திகளாவர். இந்த மூவரோடு மறைத்தல் தொழிலை ஈஸ்வரனும், அருளல் தொழிலை சதாசிவனும் செய்கின்றனர்.  இவர்கள் ஐந்து பேரும் பராசக்தியின் ஆணைக்கு கட்டுப்பட்டவர்கள்.  அம்பிகையின் புகழை எல்லாம் ஈஸ்வரன் திருடி விட்டதாக குற்றம் சாட்டுகிறார் நீலகண்ட தீட்சிதர். மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்தார். காலனை காலால் உதைத்தார் என்று சிவன் புகழ் பெற்று விட்டார்.  அந்த நெற்றிக் கண்ணில் பாதி உன்னுடையதாச்சே! காலனை இடதுகால் உதைத்தது! அதுவும் உன்னுடையதே! என்று சக்தியிடம் கூறுகிறார். சிவனில் பாதியாக சக்தி இருப்பதால் இப்படி கூறுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !