உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாணவர்களுக்கு ஒரு வார கால ஆன்மிக பயிற்சி முகாம்

மாணவர்களுக்கு ஒரு வார கால ஆன்மிக பயிற்சி முகாம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, ஆர்ஷ வித்யா பீடத்தில், ஒரு வார கோடைக்கால ஆன்மிக பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

ஆர்ஷ வித்யா பீடம், விஸ்வ ப்ரம்ம வேத ஆய்வு மையம் சார்பில், ஒரு வார கோடைக்கால ஆன்மிக பயிற்சி முகாம், ஆனைமலை ஆர்ஷ் வித்யா பீடத்தில் கடந்த, 24ம் தேதி முதல் நடக்கிறது. அதில், பள்ளி மாணவர்களுக்கு தியானம், யோகா, வேதாந்தம், வேதம் (ஸூக்த பாராயணம்), சங்கீத வாய்ப்பாடு, ஸ்தோத்ரம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சி முகாம், நாளை (1ம் தேதி) வரை நடக்கிறது. பூஜ்யஸ்ரீ ததேவானந்த சரஸ்வதி சுவாமிகள், ப்ரம்ம ஸ்ரீ தயாதாசன் ஆச்சார்யா ஜி, சீதாலட்சுமி, ராஜேஸ்வரி ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !