உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று வளர்பிறை அஷ்டமி; சங்கடம் தீர்ப்பார் கால பைரவர்..!

இன்று வளர்பிறை அஷ்டமி; சங்கடம் தீர்ப்பார் கால பைரவர்..!

சிவனின் அவதாரங்களில் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவர் அம்சம். எட்டு திக்கும் காக்கும் காவல் தெய்வம் கால பைரவர். பைரவருக்கு செவ்வரளி சாற்றி வழிபட மனக்குழப்பம், கடன்பிரச்னை நீங்கும். இன்று சொர்ணாகர்ஷண பைரவரை வழிபட பொன்னும் பொருளும் சேரும். வளர்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட வரும் துன்பம் யாவும் நீங்கும். போகம், யோகம், வேகம் என சிவபெருமானுக்கு மூன்று வடிவம் உண்டு. இதில் தீயசக்திகளை அழிக்கும் வேக வடிவம் காலபைரவர். இவரை வழிபட செய்வினை, திருஷ்டி, கடன், எதிரி தொல்லை தீரும்.

சிவபெருமானின் பலவிதமான கோலங்களில் ஒன்று பைரவர்.  இவரது 64 வடிவங்களில் கால பைரவர் சிறப்பு மிக்கவர். பக்தர்கள் விரும்பும் வரத்தை சரியான காலத்தில் அருள்பவர் இவர். நம்மை வாட்டும் துன்பங்களில் இருந்து விடுவிப்பவர். இக்கட்டான சூழ்நிலையில் இவரை சரணடைந்தால் நிச்சயம் கரை சேர்ப்பார். தீராக் கடன், குடும்ப பிரச்னை, குழந்தையின்மை, நீதிமன்ற வழக்குகளில் இருந்து நம்மை விடுவிப்பவர் கால பைரவ மூர்த்தி. காசியின் காவல் தெய்வமான இவருக்கு பூஜை நடந்த பிறகே காசி விஸ்வநாதருக்கு பூஜைகள் நடக்கின்றன.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !