கொப்புடையநாயகி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா கோலாகலம்
ADDED :512 days ago
காரைக்குடி; காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயில், செவ்வாய் திருவிழாவை முன்னிட்டு நடந்த தெப்பத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயில் செவ்வாய் திருவிழா கடந்த மே 7 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும், வெள்ளிக்கேடயதில் அம்பாள் புறப்பாடும் பக்தி உலாவும் இரவு தீபாராதனை, பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த மே 14 ஆம் தேதி நடந்தது. நேற்று இரவு தெப்பத்திருவிழா நடந்தது. தெப்பத்தில் அம்பாள் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.