உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆத்தங்குடி லோகநாயகி அம்மன் கோயில் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஆத்தங்குடி லோகநாயகி அம்மன் கோயில் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்

காரைக்குடி; காரைக்குடி அருகேயுள்ள ஆத்தங்குடி முத்துப்பட்டினம் லோகநாயகி அம்மனகோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். காரைக்குடி அருகேயுள்ள ஆத்தங்குடி முத்துப்பட்டினம் லோகநாயகி அம்மனகோயில் பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. காலையில் கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் தொடர்ந்து லோகநாயகி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும் நடந்தது. பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஆத்தங்குடி மேட்டுப்பட்டியில் இருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடந்து அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் நடந்தது. விழாவில் ஆத்தங்குடி முத்துப்பட்டினம் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !