உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடைக்கானலில் ஆற்றில் இறங்கிய அழகர்; பக்தர்கள் பரவசம்

கொடைக்கானலில் ஆற்றில் இறங்கிய அழகர்; பக்தர்கள் பரவசம்

கொடைக்கானல், கொடைக்கானலில் வைகாசி விழாவையடுத்து அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. கொடைக்கானல் வாதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு யாகசாலை பூஜையுடன் வைகாசி விழா தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவில் இன்று கோயிலிருந்து புறப்பாடு செய்த அழகர் ஆனந்தகிரி தெருக்களில் வலம் வந்து டோபி கானல் ஆற்றில் இறங்கினார். பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு வழிபட்டனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !