உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஸ்வநாதன் கோவில் கும்பாபிஷேகம் ; முளைப்பாரி எடுத்து வந்த பக்தர்கள்

விஸ்வநாதன் கோவில் கும்பாபிஷேகம் ; முளைப்பாரி எடுத்து வந்த பக்தர்கள்

அனுப்பர்பாளையம்; திருப்பூர், பல்லடம் ரோடு தட்டான் தோட்டம் பகுதியில் ‌அமைந்துள்ள ‌அருள்தரும் விசாலாட்சி உடனமர் விஸ்வநாதர் திருக்கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை மாதொருபாகனார் அறக்கட்டளையின் தலைவர் சுந்தரகணேசனார், முன்னிலையில் நடைப்பெறுகிறது. விழாவையொட்டி, நேற்று மாலை பக்தர்கள் முளைப்பாரி எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று 17 ம் தேதி காலை 9:05 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு, 9:15 மணிக்கு திருக்கோவில் விமானங்களுக்கு திருக்குட நன்னிராட்டை தொடர்ந்து, விஸ்வநாத பெருமானுக்கு கும்பாபிஷேகம் நடைப்பெறுகிறது.‌ விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !